நாடுகடத்த முடிவெடுக்கும் ட்ரம்ப்... புலம்பெயர் மக்களை எதிர்கொள்ள தயாராகும் கனடா
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்த டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளதை அடுத்து கனடாவின் தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 மில்லியன் மக்கள்
வியாழக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் இருந்து ஆவணமற்ற 11 மில்லியன் மக்கள் வெளியேற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஹெய்தி மக்கள் கனடாவிற்கு தப்பினர். அந்த மக்களுக்கான தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலையை ட்ரம்ப் ரத்து செய்திருந்தார்.
கிராமப்புற சாலையான ரோக்ஷாம் சாலை சந்திப்பு வழியாக பலர் பயணப்பட்டனர். ஆனால், கனடாவும் அமெரிக்காவும் பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்த பிறகு, 2023ல் அந்த கடக்குதல் மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மக்கள் அதிகமாக கடக்க வாய்ப்பிருப்பதால், அதை எதிர்கொள்ள தங்களிடம் திட்டமிருப்பதாக RCMP தெரிவித்துள்ளது. எல்லையை கடப்பவர்கள் தஞ்சம் கோருவார்கள் என்றால், அவர்கள் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பமாட்டார்கள்.
குறைந்தது 44 மாதங்கள்
அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். ஏற்கனவே 250,000 பேர்கள் கனடாவில் தஞ்சம் கோரியுள்ளனர். ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க குறைந்தது 44 மாதங்கள் வரையில் தேவைப்படுவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் புலம்பெயர் மக்களுக்கான முறையான பாதைகள் மூடப்பட்டால், மிக ஆபத்தான உயிருக்கு உத்தரவாதமற்ற 5,500 மைல் எல்லை கொண்ட பாதைகளை குடும்பங்கள் தெரிவு செய்யக் கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |