இந்திய வம்சாவளி ஆதரவாளரை கைவிட்ட ட்ரம்ப்: முக்கிய பொறுப்பு கைநழுவியது
ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பங்கு வகித்த ஒருவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை கைவிட்டு வேறொருவருக்கு அந்தப் பொறுப்பை கொடுக்க உள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவை அமைக்கும்போது, அதில் முக்கிய இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வம்சாவளியினரில் ஒருவர் விவேக் ராமசாமி (38).
விவேக் ராமசாமி (38), 2024 அமெரிக்க தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவராவார். பின்னர் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.
ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது விவேக்கை ஸ்மார்ட் ஆனவர் என்றும், அவரால் அரசில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் புகழ்ந்தார்.
ஆக, விவேக்குக்கு ட்ரம்ப் அமைச்சரவையில் Secretary of State என்னும் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய வம்சாவளி ஆதரவாளரை கைவிட்ட ட்ரம்ப்
ஆனால், அந்தப் பொறுப்பை விவேக்குக்குக் கொடுக்காமல், மார்க்கோ ரூபியோ என்பவருக்குக் கொடுத்துள்ளார் ட்ரம்ப்.
விவேக்குடன், முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு நபரும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவர், நிக்கி ஹெய்லி.
தென் கரோலினாவின் முன்னாள் ஆளுநரான நிக்கியும் விவேக்கைப் போலவே 2024 அமெரிக்க தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |