தேர்தல் குறுக்கீடு வழக்கு... டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் நெருக்கடி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான தேர்தல் குறுக்கீடு விவகாரத்தில் தற்போது மீண்டும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சீர்குலைக்க முயற்சி
அமெரிக்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க முயற்சி முன்னெடுத்ததாக குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் தற்போது டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
2021 ஜனவரி 6ம் திகதி நாடாளுமன்றம் மீது கலவரத்தை தூண்டிய வழக்கிலும் டர்ம்ப் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தற்போது அமெரிக்காவை ஏமாற்ற சதி, உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் தடுக்கும் சதி, உத்தியோகபூர்வ நடவடிக்கையைத் தடுக்க முயற்சி மற்றும் உரிமைகளுக்கு எதிரான சதி என நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இருப்பினும், ட்ரம்ப் மீதான சில குற்றச்சாட்டுகளை தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விளக்கங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விதிவிலக்குகள் உண்டு
தேர்தல் குறுக்கீடு வழக்கில் முன்னாள் ஜனாதிபதிக்கு சில விதிவிலக்குகள் உண்டு என உச்ச நீதிமன்றம் ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்த நிலையிலேயே தற்போது ட்ரம்ப் மீது நான்கு பிரிவுகளில் குற்றச்சாட்டு மீண்டும் பதியப்பட்டுள்ளது.
ஆனால் ட்ரம்ப் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளில் அவர் இதுவரை குற்றவாளி என உறுதி செய்யப்படவில்லை. மேலும் தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்தும் வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |