ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர்
வெள்ளை மாளிகையில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்டவரின் கொலைப்பட்டியலில் இந்திய வம்சாவளி FBI தலைவர் காஷ் படேல் பெயர் விடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையாக நடந்துகொள்ள
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் பின்னர் முதல் முறையாக வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து நிகழ்வில் கலந்துகொள்ல முடிவெடுத்திருந்தார்.

ஊடகங்களிடம் குறிப்பாகக் கடுமையாக நடந்துகொள்ளத் தயாராகி வந்ததாக ட்ரம்ப் பின்னர் அவரே ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், திடீரென்று துப்பாக்கி வெடித்தது.
ஜனாதிபதியும் அவரது மனைவியும், துணை ஜனாதிபதியும் உடனடியாக ரகசிய சேவை அதிகாரிகளால் பத்திடமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் அமைச்சர்களும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது கோல் தாமஸ் ஆலன் என்பவர் சம்பவயிடத்திற்கு மூன்று துப்பாக்கிகளுடன் வந்தது பின்னர் உறுதி செய்யப்படது.
அவருக்கு ஒரு திட்டம் இருந்தது என்றும், அதை அவர் பதிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சுமார் பத்து நிமிடங்களுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஒரு அறிக்கையில்,

ஆலன் தான் யாரைக் குறிவைக்க உத்தேசித்துள்ளார் என்பதைத் துல்லியமாக விவரித்திருந்தார். நியூயார்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், அந்தப் பட்டியல் ட்ரம்ப் நிர்வாகத்தின் மிக மூத்த அதிகாரிகளிடமிருந்து தொடங்கி வரிசையாக இடம்பெற்றிருந்தது.
ஒரு பெயர் மட்டும்
ஆனால், ஒரு பெயர் மட்டும் அதில் விடுபட்டிருந்தது. அது இந்திய வம்சாவளி FBI தலைவர் காஷ் படேல் பெயர். அவரது பெயர் ஏன் விடுபட்டது என்பது தொடர்பில் இதுவரை விளக்கம் ஏதும் வெளிவரவில்லை.

அந்த அறிக்கையில், தாக்குதலுக்கான ஆலனின் நியாயப்படுத்தலும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், வாஷிங்டன் ஹில்டனுக்குள் இருந்த பாதுகாப்புச் சோதனைச் சாவடியைக் கடந்து ஓடி, அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தியதாகக் காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆலன் கைது செய்யப்பட்டார்.
ஆலன் ஃபெடரல் அளவிலான துப்பாக்கி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்றும், திங்களன்று குற்றச்சாட்டு விசாரணைக்காக ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றும் கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க சட்டத்தரணி ஜீனின் பிரோ உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |