தங்கம், வேளாண் பொருட்களுக்கு வரி விலக்கு... சில நாடுகளுக்கும்: ட்ரம்ப் புதிய ஆணை
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகள் அனைத்தும் பல பொருட்களுக்கு வரி விலக்கு பெறும் என்ற புதிய ஆணை ஒன்றில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
45க்கும் மேற்பட்ட
இந்த விலக்கு செப்டம்பர் 8 திங்கள் முதல் அமுலுக்கு வரும். இந்த உத்தரவின் நோக்கம் உலகளாவிய வர்த்தக அமைப்பை மறுவடிவமைப்பதாகும். அத்துடன், அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைத்து, நேச நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதும் நோகம் என கூறுகின்றனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், ட்ரம்பின் நிர்வாக உத்தரவு 45க்கும் மேற்பட்ட வகைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கிறது. அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நாடுகளுக்கு மட்டுமே இந்த விலக்கு வழங்கப்படும்.
இதனால், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் பயன்பெறும். ட்ரம்பின் புதிய உத்தரவால் ஜப்பான் பெரும் நன்மையைப் பெறும். சமீபத்தில், அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
விமானம் மற்றும் பாகங்கள்
குறிப்பாக ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோ பாகங்கள் மீதான வரி 27.5% லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக, ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.
ட்ரம்பின் புதிய உத்தரவால் இயற்கை கிராஃபைட், நியோடைமியம் காந்தங்கள், LEDகள், சூரிய மின்கலங்களின் முக்கிய பாகங்கள், பிளாஸ்டிக் மற்றும் பாலிசிலிக்கான், நிக்கல், தங்கம், பொது மருந்துகள் மற்றும் ரசாயனங்கள், விவசாய பொருட்கள், விமானம் மற்றும் அவற்றின் பாகங்கள், காப்புரிமை இல்லாத மருந்துகள் வரி விலக்கு பெறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |