தங்கம் மற்றும் பிளாட்டினம் அட்டையை அறிமுகப்படுத்தும் டிரம்ப் - என்ன கட்டணம்? எப்படி பெறுவது?
டிரம்ப் அறிவித்துள்ள தங்கம் மற்றும் பிளாட்டினம் அட்டையை பெறும் வழிமுறைகள் குறித்து காணலாம்.
H1B கட்டணம் உயர்வு
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கான விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
இதன்படி, அமெரிக்காவில் வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு H1B விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவிற்கான ஆண்டு கட்டணத்தை, 1 லட்சம் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தியுள்ளார் டிரம்ப்.
டிரம்பின் இந்த அறிவிப்பு வெளிநாட்டவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்கள் 71% பேர் இந்தியர்கள் ஆவார்கள். 11.7 சதவீதத்துடன் சீனா 2வது இடத்தில் உள்ளது.
அதே போல், EB-1 மற்றும் EB-2 விசாக்களுக்கு மாற்றாக தங்க மற்றும் பிளாட்டினம் அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார்.
டிரம்ப் தங்க அட்டை
தனிநபர்கள் 15,000 டொலர்கள் சோதனைக் கட்டணம் மற்றும் 1 மில்லியன் டொலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.8.80 கோடி) செலுத்தி தங்க அட்டைக்கு(Golden Card) விண்ணப்பிக்க முடியும்.
trumpcard.gov என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன் பின்னர், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) ஒரு ஆழமான பின்னணி சரிபார்ப்பு செயல்முறையை நடத்துகிறது.
நீங்கள் அங்கீகரிக்கப்பட்டால் தங்க அட்டை பெற்று, அதனை 50 மாநிலங்கள் மற்றும் அமெரிக்க பிரதேசங்களிலும் பயன்படுத்தலாம்.
தங்க அட்டை வைத்திருப்பவர்களுக்கு, மற்ற அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்கள், குடிமக்களைப் போலவே வரி விதிக்கப்படும்.
டிரம்ப் பிளாட்டினம் அட்டை
தனிநபர்கள் 5 மில்லியன் டொலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.44 கோடி) செலுத்தி பிளாட்டினம் அட்டை பெற முடியும்.
இதன் மூலம், வெளிநாட்டில் ஈட்டும் வருமானங்களுக்கு எந்த வரியும் செலுத்தாமல், 270நாட்களுக்கு அமெரிக்காவில் இருக்க முடியும்.
இதற்கான செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை. விண்ணப்பிக்க விரும்புவார்கள், பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கலாம். திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
கார்பரேட் தங்க அட்டை
நிறுவனங்கள் 2 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.17.61 கோடி) செலுத்தி வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தி கொள்ளலாம்.
இதனை பெற, செயலாக்க கட்டணத்தை செலுத்தி DHS சார்பார்ப்பிற்கு காத்திருக்க வேண்டும். வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள், கட்டணம் மற்றும் DHS சரிபார்ப்புடன் இந்த அட்டையை ஒரு பணியாளரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |