இதை செய்யாவிடில் நாடு கடத்தப்படுவீர்கள்! எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் தங்கினால், அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கைகள்
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் டொனால்ட் ட்ரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வரி விதிப்புகளை அமுல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் தங்கும் வெளிநாட்டினரை அச்சுறுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ட்ரம்ப் அரசு.
அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எல்லா நேரங்களிலும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்
அத்துடன் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அதனை செய்யத் தவறினால் அது குற்றம்.
அதற்கு கைது, அபராதம், சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில், "புதிய ஒழுங்கு விதிகளின்படி விசா வைத்திருப்போர், கிரீன் கார்டு பெற்றவர்கள் மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்ற தனிநபர்கள் என அவர்கள் முன்பே பதிவு செய்யப்பட்டவர்கள் என பரிசீலிக்கப்பட்டவர்கள் என்றாலும், அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்து நிரூபிக்கப்படும் வகையில், எல்லா நேரங்களிலும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |