புலம்பெயர்ந்தோருக்கு 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம்: ட்ரம்பின் உத்தரவால் கலக்கம்
ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு, 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதித்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
அபராதத் தொகையை செலுத்துமாறு சுமார் 4,500 புலம்பெயர்ந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள்.
யாருக்கு இந்த அபராதம்?
அதாவது, நாடுகடத்தும் இறுதி உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் அமெரிக்காவை விட்டு வெளியேறாத புலம்பெயர்ந்தோருக்கே இந்த அபராதம்.
அதிகபட்சமாக 1.8 மில்லியன் டொலர்களிலிருந்து குறைந்தபட்சம் 5,000 டொலர்கள் வரையில், சுமார் 4,500 புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ள மொத்த அபராதத்தொகை, சுமார் 500 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்த அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், பலர் கலக்கமடைந்துள்ளார்கள்.
ஏற்கனவே பல்வேறு காரணங்களால் உயிர் வாழ படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எங்கிருந்து இவ்வள்வு பெரிய தொகையை அபராதமாக செலுத்துவது என்கிறார்கள் அவர்கள்.
இப்படி புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான அபராதம் விதித்தால், வேறு வழியில்லாமல் அவர்களாகவே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதே ட்ரம்ப் அரசின் திட்டம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |