மருத்துவமனை விஜயம், MRI ஸ்கேன்: வெளிப்படையாக பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்
தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், சமீபத்திய மருத்துவமனை விஜயத்தின்போது தனக்கு முறையான MRI ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வயதான ஜனாதிபதி
மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு சமீபத்தில் சென்றபோது ஸ்கேன் எடுத்துக்கொண்டதாக ட்ரம்ப் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

ஆனால், ஏன் திடீரென்று MRI ஸ்கேன் முன்னெடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் வயதான ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் ட்ரம்ப்,
அவரது கையின் பின்புறத்தில் அசாதாரணமான தொடர்ச்சியான காயங்களை பார்வையாளர்கள் கவனித்ததைத் தொடர்ந்து, சமீபத்திய மாதங்களில் அவரது உடல்நிலை தொடர்பில் ஊகங்கள் அதிகரித்தது.
கடந்த ஜூலை மாதம், ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதற்காக அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
முழுமையான முடிவு
இந்த நிலையில் சமீபத்திய அவரது மருத்துவமனை விஜயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து வெளிப்படையாக பதிலளித்த ட்ரம்ப், MRI ஸ்கேன் முன்னெடுக்கப்பட்டது உண்மை என்றார்.

மேலும் முழுமையான முடிவுகளை வெளியிடவும் தாம் தயார் என்றார். MRI ஸ்கேன் ஏன் திடீரென்று என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அதை நீங்கள் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.
மட்டுமின்றி, 79 வயதான ட்ரம்பின் உடல்நிலை 14 வருடம் இளமையாக இருப்பதாகவும் ஜனாதிபதியின் முதன்மையான மருத்துவர் கேப்டன் ஷான் பார்பரெல்லா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |