டிரக் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப் - கனடாவிற்கு பாதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது Truth Social சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 2025 நவம்பர் 1 முதல் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக டிரக்குகளுக்கும் 25% வரி விதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பெரும்பாலும் கனடா மற்றும் மெக்ஸிக்கோவை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில், அமெரிக்கா சுமார் 2,45,764 நடுத்தர மற்றும் கனரக டிரக்குகளுக்கு இறக்குமதி செயதுள்ளது.
இதில் கனடாவிலிருந்து 4.5 பில்லியன் டொலர் மற்றும் மெக்ஸிகோவிலிருந்து 15.6 பில்லியன் மதிப்பிலான டிரக்குகள் உள்ளடங்குகின்றன.
மொத்தமாக 20.1 பில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
S&P Global தரவுகளின்படி, இந்த வகை டிரக்குகள் அமெரிக்காவின் மொத்த வாகன சந்தையில் 5 சதவீதம் மட்டுமே இருந்தாலும், வட அமெரிக்காவில் இந்த வாகனங்களுக்கு 80 சதவீதம் தேவை உள்ளது.
நடுத்தர டிரக்கள் பொதுவாக 14,000 முதல் 33,000 பவுண்டுகள் வரை எடையுடையவை. கனரக டிரக்கள் 33,000 பவுண்டுகளுக்கு மேல் எடையுடையவை.
இவை பெரும்பாலும், கட்டுமானம், கழிவுகள் மேலாண்மை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற வணிக தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு போட்டியை கட்டுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump truck tariff, US import tax on trucks, Donald Trump trade policy, 25% truck import duty USA, Canada Mexico truck exports,Trump Truth Social