விளம்பரத்திற்கு பதிலடி... கனடா மீது அடுத்த இடியை இறக்கிய ட்ரம்ப்
கனடா மீதான வரிகளில் அவர்கள் தற்போது செலுத்துவதை விட கூடுதலாக 10 சதவீதம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கூடுதல் வரி
கனேடிய மாகணம் ஒன்ராறியோ வெளியிட்டுள்ள விளம்பரத்தால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகக் கைவிடுவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 10 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளார்.

ட்ரம்ப் தனது Truth சமூக ஊடகத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு தொடர்பில் உறுதி செய்துள்ளார். அத்துடன் ஒன்ராறியோ அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், வரிகள் வர்த்தகப் போர்களையும் பொருளாதார பேரழிவையும் ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார்.
கடும் கோபம்
இதுவே, ட்ரம்பை கடும் கோபத்திற்கு தள்ளியது. ஆனால், கனடா தரப்பில், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால், கனடா உடன்படும் என பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

ஏற்கனவே கனடா மீது 35 சதவீத வரி கடந்த ஆகஸ்ட் 1 ம் திகதி முதல் அமுலில் இருந்து வருகிறது. மட்டுமின்றி, எஃகு மற்றும் அலுமினியம் மீதான 25% வரி, வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான 25% வரி போன்றவையும் அமுலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |