உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்: அச்சத்தில் பிரான்ஸ்?
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதலே, ட்ரம்ப் அடுத்து என்ன செய்வாரோ என உலக நாடுகள் பல பதற்றத்தில் உள்ளன.
அதற்கேற்றாற்போல, பதவியேற்றதுமே, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது வரிகள் விதிப்பதாக அறிவித்தார் ட்ரம்ப்.
அச்சத்தில் பிரான்ஸ்?
இந்நிலையில், அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஆக, இந்த விடயம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவுடனான உறவு மற்றும் ஐரோப்பாவின் ராணுவ செலவீனம் ஆகிய விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே பிரஸ்ஸல்ஸில் உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடியது அதற்கு ஆதாரமாக உள்ளது எனலாம்.
குறிப்பாக, பிரான்ஸ் ட்ரம்ப் குறித்த அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மாநாட்டுக்கு முன் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பேச்சில் அவரது அச்சம் வெளியானது எனலாம்.
உக்ரைன் ஊடுருவலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளும், ஐரோப்பாவை ஒற்றுமையாக இருக்கவேண்டும், தனது பாதுகாப்புக்கு, தானே பொறுப்பு எடுக்கவேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஆனால், விடயம் என்னவென்றால், ஐரோப்பிய தலைவர்களில் பலர் ட்ரம்பை எதிர்க்க தயங்குகிறார்கள்.
போலந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளின் தலைவர்கள், ட்ரம்புடன் மோதக்கூடாது, அமெரிக்காவுடன் நல்ல உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
ஜேர்மனியின் எதிர்க்கட்சிகளிடமும் இந்த கருத்தே நிலவுகிறது.
ஆக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பயப்பட வைத்துவிட்டார் ட்ரம்ப் என்றே தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |