தனது படத்துடன் புதிய Patriot பாஸ்போர்ட்டை வெளியிட்ட ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது படத்துடன் கூடிய புதிய "Limited Edition" பாஸ்போர்ட்டை வெளியிட்டார்.
இது அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாஸ்போர்ட்டில், ட்ரம்ப் தனது மேசையில் சாய்ந்து நிற்கும் புகைப்படம், அவரது கையொப்பம் மற்றும் சுதந்திர அறிவிப்பின் உரை பின்னணியில் இடம்பெற்றுள்ளது.

இந்த படம், வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞர் டேனியல் டோரோக் எடுத்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
பாஸ்போர்ட்டின் எதிர்புறத்தில், 1776-ஆம் ஆண்டு சுதந்திர அறிவிப்பு கையெழுத்திடப்பட்ட காட்சியின் ஓவியம் மற்றும் “United States of America 250” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வெள்ளை மாளிகை இதனை “Patriot Passport” என அழைத்துள்ளது.

இந்த பாஸ்போர்ட், வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது. இதன் மூலம், ட்ரம்ப் தனது தனிப்பட்ட அடையாளத்தை அரசு நிறுவனங்களில் வலுப்படுத்தி வருகிறார்.
அமெரிக்க வரலாற்றில், ஒரு ஜனாதிபதியின் படம் நேரடியாக பயண ஆவணத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால், ட்ரம்ப் தனது அரசியல் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |