பொருளாதார சரிவில் அமெரிக்கா: பலரும் அதிருப்தியில் இருக்க.,ட்ரம்பின் செயல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் பேஸ்பால் அணி வீரர்களை சந்தித்து பேசினார்.
கடுமையான அதிருப்தி
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால், பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் ட்ரம்ப் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்காவின் பொருளாதார அமைதியின்மையை ட்ரம்ப் கண்டுகொள்ளாமல், லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் என்ற பேஸ்பால் அணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்.
அங்கு அவர்களை பாராட்டிய ட்ரம்ப், "நான் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த வீரர்கள்" என்று குறிப்பிட்டார்.
ஓவல் அலுவலகத்தில் வீரர்கள்
மேலும், அணியின் மேனேஜர் டேவ் ராபர்ட்ஸ், நட்சத்திர வீரர்களான ஷோஹேய் ஓஹ்தனி, மூகி பெட்ஸ் மற்றும் கைக் ஹெர்னாண்டஸ் ஆகியோருடன் கைகுலுக்கினார்.
பின்னர் சாம்பியன் வீரர்களை ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார் மற்றும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அமெரிக்கா பொருளாதார நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், ட்ரம்ப் விளையாட்டு வீரர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டியது பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |