உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்திக்க நாள் குறித்த டொனால்டு ட்ரம்ப்
ரஷ்ய படைகளை விரட்டியடிப்பதற்கான உக்ரைனின் போர் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் ஜெலென்ஸ்கியை சந்திக்க இருப்பதாக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சந்திப்பேன்
குறித்த சந்திப்பானது நேரிடையாகவா அல்லது காணொளியா என்பது தொடர்பில் ட்ரம்ப் விளக்கமளிக்கவில்லை. ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது உக்ரைன் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.
அடுத்த வாரம் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்திப்பேன் என்று கூறியுள்ள ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினையும் சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பு எங்கே நடைபெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், தாம் வாஷிங்டனில் இருப்பதாகவும், தற்போது உக்ரைனுக்கு செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கைமாறாக
மனிதாபிமான அடிப்படையில் உக்ர8இன் போரை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மூன்றாண்டுகளாக நீடிக்கும் இந்த போரானது அபத்தமான ஒன்று என்றார்.
உக்ரைனுக்கான அமெரிக்க ஆதரவுக்கு கைமாறாக அவர்களிடம் குவிந்துள்ள கனிம வளங்களைக் கோர இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |