விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் குறித்து மோசமாக விமர்சித்த ட்ரம்ப்
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
8 மாதங்களுக்கும் மேலாக
விண்வெளி வீரர்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, உங்களை மீட்க நாங்கள் வருகிறோம் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
2024 ஜூன மாதத்தில் Butch Wilmore மற்றும் Sunita Williams இணைப் பயணித்த Boeing Starliner சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் 8 நாட்கள் அங்கே தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாகனத்தின் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றதாக மாறியது. தற்போது அவர்கள் இருவரும் 8 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் இரு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டதன் முதன்மையான காரணம் ஜனாதிபதி ஜோ பைடன் மட்டுமே என ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காதலர்களாக இருக்கலாம்
நமது வரலாற்றிலேயே மிகவும் திறமையற்ற ஜனாதிபதி ஒருவரால் இப்படியான சிக்கல் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த ஜனாதிபதி ட்ரம்ப் அதை நடக்க விடமாட்டார் என்றார்.
தற்போது டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கின் Space-X நிறுவனத்தின் முயற்சியால் அந்த இரு விண்வெளி வீரர்களும் மார்ச் 19 அல்லது 20ம் திகதி பூமிக்கு திரும்ப உள்ளனர்.
இதனிடையே, சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், விண்வெளியில் 8 மாதங்கள் சிக்கியிருப்பது என்பது எளிதான ஒன்றல்ல, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பலாம், அல்லது காதலர்களாக இருக்கலாம், அதனாலையே அவர்கள் அங்கே தங்கியிருக்கிறார்கள், யாருக்கு தெரியும் என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |