உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்

Donald Trump Emmanuel Macron Strait of Hormuz
By Balamanuvelan Mar 18, 2026 05:00 PM GMT
Report

உலகத்தையே கட்டுப்படுத்துபவர் போல பல்வேறு நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது.

ஆம், எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகள் எடுத்துவரும் ட்ரம்பை, ஈரான் விடயத்தில் கைவிட்டுள்ளன பல நாடுகள்.

அதனால், கடுப்பிலிருக்கும் ட்ரம்ப், தன் கோபத்தை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்

ஆம், ஈரான் விடயத்தில் அமெரிக்காவுக்கு உதவிக்கு வராததால் பிரித்தானிய பிரதமரை மிரட்டியுள்ள ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானை கேலி செய்துள்ளார். 

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப் | Trump Mocks Macron He Will Be Out Of Office

ஈரான் விடயத்தில் பல நாடுகள் ட்ரம்பை கைவிட்டுவரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரானும், ஈரான் பிரச்சினையில் எங்களுக்குப் பங்கில்லை.

ஆகவே, தற்போதைய சூழலில், ஹோர்மூஸ் ஜலசந்தியை மீட்கும் ஆபரேஷன்களில் பிரான்ஸ் பங்கேற்காது என்று கூறியுள்ளார்.

என்றாலும், நிலைமை அமைதியாகும் பட்சத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து ஹோர்மூஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு தொடர்பில் உதவத் தயாராக இருக்கிறோம் என்றும் மேக்ரான் கூறியுள்ளார். 

பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கிய அண்டை நாடு

பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கிய அண்டை நாடு

மேக்ரானின் பதிலால் எரிச்சலடைந்துள்ள ட்ரம்ப், நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், நமது நடவடிக்கைகளுக்கு நமது நேட்டோ கூட்டாளர்கள் ஆதரவாக இருந்தார்கள். 

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப் | Trump Mocks Macron He Will Be Out Of Office

ஆனால், நாம் அவர்களுக்கு உதவி செய்தும் கூட, நமக்கு உதவி செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை. நேட்டோ முட்டாள்தனமான தவறைச் செய்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அப்போது, மேக்ரானின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ட்ரம்ப், அவர்தான் சீக்கிரம் பதவியிலிருந்து வெளியேறிவிடுவாரே, அப்புறம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

2027ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு முறை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்ட மேக்ரான், அடுத்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US