பதவியேற்ற முதல் நாளே புலம்பெயர்வோரை கண்ணீர் விடவைத்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளே புலம்பெயர்வோரை கண்ணீர் விடவைத்துள்ளார் ட்ரம்ப்.
கண்ணீர் விட்ட புலம்பெயர்வோர்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில விநாடிகளில், அமெரிக்காவுக்குள் சட்டப்படி நுழைய விண்ணப்பித்துக் காத்திருந்தோர் உட்பட புலம்பெயர்வோர் பலர் கண்ணீர் விடும் நிலை உருவானது.
ஆம், புலம்பெயர்வோர் சட்டப்படி அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விண்ணப்பிப்பதற்காக CBP One என்னும் மொபைல் ஆப் ஒன்று முந்தைய ஜோ பைடன் அரசால் உருவாக்கப்பட்டிருந்தது.
புலம்பெயர்வோர் சட்டப்படி அமெரிக்காவில் புகலிடம் கோர அந்த ஆப் மூலம் விண்ணப்பிப்பார்கள்.
ட்ரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்தில், அந்த ஆப்பை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.
நாளொன்றிற்கு சுமார் 280,000 பேர் அந்த ஆப்பில் லாகின் செய்யும் நிலையில், நேற்று மதியம் திடீரென, அந்த ஆப் பயன்பாட்டில் இல்லை என்றும், ஏற்கனவே புகலிடம் கோர பெற்றிருந்த அப்பாயிண்ட்மென்ட்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறையின் இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டது.
Migrants in Ciudad Juárez who were waiting for their 1 pm CBP1 parole appointments learned 20 minutes ago that the app has shut down & those appointments are no longer valid. pic.twitter.com/F3pNrZyEBR
— Arelis R. Hernández (@arelisrhdz) January 20, 2025
புகலிடம் கோர அப்பாயிண்ட்மென்ட் பெற்றிருந்தவர்களும், அப்பாயிண்ட்மென்ட் பெற காத்திருந்தவர்களும் அந்த செய்தியால் திகைப்படைய, சிலர் சத்தமாகவே கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்கள்.
ட்ரம்ப் தான் சொன்னதை செய்து காட்டிவிட்டார். அமெரிக்க எல்லை, அதிகாரப்பூர்வமாக புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மூடப்பட்டுவிட்டது. அடுத்து என்ன என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |