ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ள ட்ரம்பின் சொத்து மதிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே, டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிக லாபம் ஈட்டிய ஜனாதிபதி
பெரும் கோடீஸ்வரரான ட்ரம்ப், அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகவும் பணக்கார ஜனாதிபதி என்ற பட்டத்தையும் பல ஆண்டுகளாக வகித்து வருகிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க வரலாற்றிலேயே தனிப்பட்ட முறையில் அதிக லாபம் ஈட்டிய ஜனாதிபதி எனவும் ட்ரம்ப் அறியப்படுகிறார்.
ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்படும் போது அவரது சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டொலர் என இருந்துள்ளது. ட்ரம்பை ஒப்பிடுகையில், அவர் இரண்டாமிடத்தில் உள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதிகளையும் விட அதிக வருவாய் ஈட்டியுள்ளார். இதில் பெரும் பகுதி, அவருடைய மூன்று மகன்களும் முன்னெடுத்து வந்த கிரிப்டோகரன்சி முதலீடுகளைப் பணமாக்கியதன் மூலம் கிடைத்ததாகும்.
மட்டுமின்றி பல்வேறு முதலீடுகளில் இருந்தும் ட்ரம்ப் பெருந்தொகை சம்பாதித்து வருகிறார். ட்ரம்பிற்குச் சொந்தமாகப் பல கோல்ஃப் மைதானங்கள், கிளப்புகள், மாளிகைகள் மற்றும் ஒரு ஒயின் ஆலை ஆகியவை உள்ளன.

அவரிடம் டிரம்ப் ஃபோர்ஸ் ஒன் என்ற பெயருடைய ஒரு போயிங் 757 விமானமும் உள்ளது, அதை அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தனிப்பட்ட பயணங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார்.
கைக்கடிகாரம்
2016-ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது, ட்ரம்ப் நிர்வாகம் என்பதை அவரது பிள்ளைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு ரத்து செய்யக்கூடிய அறக்கட்டளையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அவரது ட்ரம்ப் கைக்கடிகாரங்கள், 500 டொலர் முதல் 3,000 டொலர் வரை விலையில் விற்கப்படுகின்றன. முன்பு, 18 காரட் தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட, 100,000 டொலர் மதிப்புள்ள ட்ரம்ப் விக்டரி டூர்பில்லன் கைக்கடிகாரம் ஒன்று விற்பனை செய்யப்பட்டது.
2016ல் அவர் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும்போது, அவரது சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டொலராக இருந்தது. ஆனால், அதன் பின்னர் அது 2.1 பில்லியன் டொலராக சரிவடைந்தது.

2022 மற்றும் 2024ல் அவரது சொத்து மதிப்பு 3 முதல் 4 பில்லியன் டொலராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 2026 ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 6.6 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு என தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |