ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல, அமெரிக்காவில்... கேலி செய்யும் ட்ரம்பின் அண்ணன் மகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளை அவரது அண்ணன் மகளே கேலி செய்துள்ளார்.
கேலி செய்யும் ட்ரம்பின் அண்ணன் மகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து ஈரானைத் தடுப்பதற்காக என கூறி ஈரான் மீது நடத்திய தாக்குதலால், சம்பந்தமே இல்லாத நாடுகள் எல்லாம் எரிபொருள் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றன.
ஆனால், ட்ரம்போ, தான் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக பெருமை பேசிவருகிறார்.

அதாவது, ஈரான் உச்ச தலைவர் காமேனி முதலான பலரை கொன்றதை குறிப்பிட்டு, தான் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திவிட்டதாக பெருமை பேசிவருகிறார் ட்ரம்ப்.
இந்நிலையில், ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி. எல். ட்ரம்ப் என்னும் பெண்ணே ட்ரம்பை கேலி செய்துள்ளார்.
Donald is going to get regime change after all--but in America, not Iran.
— Mary L Trump (@MaryLTrump) March 29, 2026
No Kings.
சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்பால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உண்மைதான்.
ஆனால், ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல, அமெரிக்காவில் என கேலியாக குறிப்பிட்டுள்ளார் மேரி.

ஈரான் போர் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது என முன்பே குறிப்பிட்டிருந்த மேரி, ஒரு மனோவியல் நிபுணரும் எழுத்தாளரும் ஆவார்.
அவர், ஈரான் போர் பல உயிர்களை பலி வாங்க இருப்பதுடன், பல பில்லியன் டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |