அமெரிக்காவை விட்டு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு இலவச விமான டிக்கெட், பண பரிசு! ட்ரம்ப் புதிய திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிலிருந்து தாங்களாகவே வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
“Project Homecoming” என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவை விட்டு செல்ல விரும்பும் புலம்பெயர் மக்கள் இலவச விமான டிக்கெட் மற்றும் பணப் பரிசாக $1,000 பெற முடியும்.
ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவில், "எந்த சட்டவிரோத புலம்பெயர்த்தோரும், விமான நிலையம் சென்று, இலவசமாக வெளிநாட்டுக்கு விமானம் பிடிக்கலாம். புதிய CBP HOME என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தி, விருப்பமான நாட்டுக்கு பயண முன்பதிவு செய்யலாம்," எனக் கூறினார்.
அதிகாரபூர்வமாக அமெரிக்க உள்துறை இந்த வாரம் கூறியது: ஒரு புலம்பெயர்ந்தோரை கைது செய்து, நீக்குவதற்கு 17,000 டொலர் ஆகும். ஆனால் இந்த தன்னிச்சையான வெளியேறல் திட்டம் 70 சதவீத செலவை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அமெரிக்காவிற்கு பில்லியன்களில் மிச்சப்படுத்தும் என்றும், எதிர்காலத்தில் இது டிரில்லியன் டொலர்களை மிச்சப்படுத்தும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
எச்சரிக்கையாக, அவர் கூறியது: "இத்திட்டத்தை ஏற்காதவர்கள் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டும். சொத்துக்கள் பறிமுதல், சம்பளங்கள் முடக்கம், சிறை தண்டனை என பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் யாராவது நன்றாக நடந்து கொண்டால், மீண்டும் வர வாய்ப்பு இருக்கலாம்," என்றார்.
இந்த திட்டம், ட்ரம்ப் தலைமையிலான கடுமையான குடியேற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump migrant deportation plan, Project Homecoming USA, free flights for illegal migrants, Trump executive order migrants, US self-deportation program, CBP Home app for migrants, 1000 dollars bonus for migrant exit, Trump immigration crackdown 2025, US deportation cost savings, voluntary migrant exit USA