ஊழல் மலிந்த சீன கிரிப்டோ நிறுவனருக்கு மன்னிப்பு: கடும் விமர்சனத்திற்கு உள்ளான ட்ரம்ப்
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற Binance கிரிப்டோ நிறுவனருக்கு மன்னிப்பு வழங்கியதற்காக டொனால்ட் ட்ரம்ப் கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளார்.
மன்னிப்பு
கடந்த பல மாதங்களாக ட்ரம்ப் குடும்பமும் Binance நிறுவனரான சாங்பெங் ஜாவோவும் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், டர்ம்ப் தமக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால் ட்ரம்பின் இந்த நகர்வு உடனடியாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது. ட்ரம்பின் கிரிப்டோ நிறுவனமும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜாவோவும் தொழில்முறையாக நெருக்கமானதும் பலரையும் எதிர்வினையாற்ற வைத்தது.
அபுதாபியில் வசிக்கும் ஜாவோ பண முறைகேடு வழக்கில் சிக்கி 4 மாதங்கள் தண்டனை பெற்றார். மட்டுமின்றி, அமெரிக்காவை கிரிப்டோவின் தலைநகராக மாற்ற உதவுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
சிறையில் இருந்து அவர் வெளியானது முதல் Binance கிரிப்டோ நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து மன்னிப்பு பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், 2023ல் அமெரிக்க நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட Binance கிரிப்டோ நிறுவனம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்பட தொடங்கும்.
பிரபலப்படுத்தி
ஜாவோவுக்கு மன்னிப்பு வழங்கியதாக தகவல் வெளியானதும், பெரும் கோடீஸ்வரரும் தொழில்நுட்பத்துறையில் தொழிலதிபருமான Joe Lonsdale கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியை இந்த விவகாரத்தில் தவறாக வழி நடத்துவதாகவும், அவரைச் சுற்றி முறைகேடு நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் குடும்பம் வெளியிட்டுள்ள கிரிப்டோ நாணயத்தை பிரபலப்படுத்தி அதிக வருவாய் ஈட்டியதற்கு ட்ரம்ப் ஊழல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததும், ட்ரம்ப் குடும்பத்தினரின் கிரிப்டோ நிறுவனமான WLF-ஐ Binance பலவகையில் ஆதரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |