அமெரிக்க கடவுச்சீட்டில் இடம்பெறும் ட்ரம்ப்பின் புகைப்படம்
அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்ப்பின் புகைப்படம் இடம் பெற உள்ளது.
கடவுச்சீட்டில் ட்ரம்ப் புகைப்படம்
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம் வரும் ஜூலை 4 ஆம் திகதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்கென ராணுவ அணிவகுப்புகள், சிறப்பு கடவுச்சீட்டு, சிறப்பு நாணயங்கள் ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி வெளியிடப்பட உள்ள சிறப்பு கடவுச்சீட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்து இடம் பெற உள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வெளியிடப்பட உள்ள இந்த கடவுச்சீட்டுகள், வாஷிங்டனில் உள்ள கடவுசீட்டு அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக எந்த கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடவுசீட்டுகளில் பெரும்பாலும், சுதந்திரா தேவி சிலை போன்ற தேசிய அடையாள சின்னங்களே இடம் பெற்றிருக்கும்.
முதல்முறையாக தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதியின் புகைப்படம் இடம் பெற உள்ளது. கடவுச்சீட்டு மட்டுமல்லாது அமெரிக்க டொலரிலும் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம் பெற உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |