அமெரிக்காவில் இவர்களுக்கு வரி இல்லை - டிரம்ப்பின் புதிய திட்டம்
அமெரிக்காவில் 1.50 லட்சம் டொலர் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதில் வரி விதிப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
வரி ரத்து
தற்போது அமெரிக்காவில், ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையியில்லை என்ற நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அமெரிக்க வணிகத்துறை செயலாளர் Howard Lutnick, "ஆண்டுக்கு 1.50 லட்சம் அமெரிக்க டொலருக்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வரியும் இருக்க கூடாது என்பதே டிரம்பின் இலக்கு. இந்த இலக்கை நிறைவேற்றவே பணியாற்றி வருகிறோம்" என கூறினார்.
வரி ரத்து செய்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, "அதை அமெரிக்கர்கள் அல்லாத மற்றவர்களை வைத்து ஈடு செய்வோம்" என பதிலளித்தார்.
முன்னதாக குடியரசு கட்சி எம்.பிக்கள் மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்கா குடி மக்களுக்கு தனிநபர் வருமான வரியை ரத்து செய்யப்படும்.
அதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்படும்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |