பிரான்ஸ் மீதும் வரி விதிப்பு: பயந்ததுபோலவே நடந்துவிட்டது
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரிவிதிப்பு குறித்து அறிவித்ததுமே, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் மீது வரிகள் விதிக்கப்படலாம் என பயந்தன.
பயந்ததுபோலவே நடந்துவிட்டது
விடயம் என்னவென்றால், பிரான்ஸ் பயந்ததுபோலவே நடக்கும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று, வியாழக்கிழமையன்று பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் மீது, டிஜிட்டல் சேவை தொடர்பில் வரிகள் விதிக்க திட்டமிட்டுள்ளார்.
அதாவது, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆல்ஃபபட் மற்றும் அமேசான் போன்ற டிஜிட்டல் ஜாம்பவான் நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கத் துவங்கியது கனடா.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், அமெரிக்க நிறுவனங்கள் மீது ஆண்டுக்கு 500 மில்லியன் டொலர்கள் சேவை வரிகள் விதித்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மீது அமெரிக்கா மட்டுமே வரிகள் விதிக்கலாம் என்று கூறியுள்ள அந்த அறிக்கை, கனடா மற்றும் பிரான்சின் வரிவிதிப்பு நடவடிக்கை நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
ஆகவே, பதிலுக்கு, கனடா மற்றும் பிரான்ஸ் மீது வரிகள் விதிக்க திட்டமிட்டுள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |