இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு
உக்ரைனுடன் போர்நிறுத்தத்திற்கு தயார் என ரஷ்யா அறிவித்த நிலையில், விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடல்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மூன்று ஆண்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார்.
இதற்காக வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரிலேயே அழைத்து தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் கூறினார்.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இரண்டு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியதாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அவர்களுக்குத் தெரியும்
அதில், "ரஷ்யாவும், உக்ரைனும் உடனடியாக சண்டை நிறுத்தம் மற்றும் மிக முக்கியமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும். அதற்கான நிபந்தனைகள் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்படும்.
ஏனெனில், வேறு யாருக்கும் தெரியாத ஒரு பேச்சுவார்த்தையின் விவரங்கள் அவர்களுக்குத் தெரியும். உரையாடலின் தொனியும், உணர்வும் சிறப்பாக இருந்தன.
அது இல்லையென்றால் பின்னர் அல்ல, இப்போதுதான் நான் அப்படி சொல்வேன். இந்த பேரழிவு தரும் 'இரத்தக்களரி' முடிந்ததும் ரஷ்யா அமெரிக்காவுடன் பாரிய அளவிலான வர்த்தகம் செய்ய விரும்புகிறது மற்றும் நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |