இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம்: டொனால்ட் ட்ரம்ப்
நான் அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நாடுகள்
கம்போடியா, தாய்லாந்து நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கம்போடியா - தாய்லாந்து போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது Truth Socialயில், "தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் மற்றும் கம்போடியா பிரதமரின் இப்போதுதான் பேசினேன்.
ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பின் ஈடுபாட்டிற்குப் பிறகு இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்தத்தையும், அமைதியையும் எட்டியுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |