கைதாகிறாரா ஒபாமா? ட்ரம்ப் பகிர்ந்த AI காணொளியால் வெடித்த சர்ச்சை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை பெடரல் அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வது பற்றிய AI-உருவாக்கிய காணொளி ஒன்றை பகிர்ந்து பராக் ஒபாமா மீதான தனது தாக்குதலை ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஒபாமா கைது
ஜனாதிபதி ட்ரம்பின் Truth சமூக ஊடக பக்கத்திலேயே AI-உருவாக்கிய காணொளியை அவர் பகிர்ந்துள்ளார். அதில், குறிப்பாக ஜனாதிபதி சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என ஒபாமா குறிப்பிடுகிறார்.
அதன் பின்னர் பல அமெரிக்க அரசியல்வாதிகள், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று கூறுவது அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து AI-உருவாக்கிய காட்சிகள் இடம்பெறுகிறது.
ஒபாமா ஒரு காலத்தில் ஜனாதிபதியாக இருந்த அதே ஓவல் அலுவலகத்தில் இரண்டு எஃப்.பி.ஐ அதிகாரிகளால் அவர் கைவிலங்கிடப்படுகிறார். ஒபாமா கைது செய்யப்படும்போது ட்ரம்ப் உட்கார்ந்து சிரிப்பதையும் அந்த காணொளியில் காணலாம்.
சிறைச்சாலை ஒன்றில் ஆரஞ்சு நிற உடை அணிந்து, ஒபாமா சிறைக்குள் நிற்பதுடன் காணொளி முடிவடைகிறது. ஆனால், ட்ரம்பின் இந்த AI காணொளி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பலர் ட்ரம்பை பொறுப்பற்றவர் என விமர்சித்துள்ளனர்.
விசாரணை நடத்த வேண்டும்
ஒபாமா தேர்தல் முறைகேடுகளால் ஜனாதிபதி பொறுப்புக்கு வந்தவர் என்றே ட்ரம்ப் விமர்சித்து வந்துள்ளார். 2016 தேர்தலுக்குப் பிறகு, ட்ரம்ப்-ரஷ்யா கூட்டுக் கோட்பாட்டை ட்ரம்பின் ஜனாதிபதி பதவியைத் தடுக்க ஒபாமாவின் முன்னாள் அதிகாரிகள் தயாரித்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த வாரம் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் ஒபாமா நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். மட்டுமின்றி, DNI அலுவலகம் இந்த விவகாரத்தில் 114 பக்கங்கள் கொண்ட விரிவான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதில், நவம்பர் 2016 தேர்தலுக்கு முன்பு, உளவுத்துறை சமூகம் ரஷ்யா சைபர் வழிகளைப் பயன்படுத்தி தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கவில்லை என்று தொடர்ந்து மதிப்பிட்டு:ள்ளது.
மேலும், டிசம்பர் 8 ஆம் திகதி 2016ல் ஜனாதிபதியும் அமெரிக்க தேர்தல் உள்கட்டமைப்பிற்கு எதிராக தீங்கிழைக்கும் சைபர் நடவடிக்கைகளை நடத்தி ரஷ்யா சமீபத்திய அமெரிக்க தேர்தல் முடிவுகளை திருத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதை அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |