புடினை கேங்க்ஸ்டர் என்பவர் வெளிவிவகார அமைச்சர்... ட்ரம்பின் அமைச்சரவையில் இவர்களுக்கு வாய்ப்பு
தடுப்பூசி கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பாளரான ஒருவர் அமெரிக்க சுகாதாரத்துறையின் தலைமை பொறுப்புக்கு டொனால்டு ட்ரம்பால் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொறுப்புக்கு எலோன் மஸ்க்
அத்துடன் தமக்கு மிகவும் நெருக்கமான, தம்முடன் கோல்ஃப் விளையாடுபவர்கள் சிலருக்கும் முதன்மையான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பொதுச் செலவினங்களை குறைக்கும் பொறுப்புக்கு எலோன் மஸ்க் வரலாம் என்றே தகவல் கசிந்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதை கடுமையாக விமர்சிக்கும் நபர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வரவும் வாய்ப்புள்ளது.
இரண்டாவது வருகையில் ட்ரம்ப் மிக கவனமுடன் தமது அணியை தெரிவு செய்வார் என்றே கூறுகின்றனர். தடுப்பூசிகளுக்கு எதிராக பரப்புரை முன்னெடுத்துவரும் Robert F Kennedy அமெரிக்காவின் சுகாதாரத்துறைக்கு பொறுப்பேற்கலாம் என கூறுகின்றனர்.
கோவிட் தடுப்பூசிக்கு எதிராக கடுமையான பரப்புரை முன்னெடுத்தவர் இவர். சமீப காலமாக தீவிர வலதுசாரி கருத்துக்களை தமது சமூக ஊடக நிறுவனம் வாயிலாக பரப்பிவரும் எலோன் மஸ்க் முக்கிய பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது.
மேலும் தமது தொழில்களை ஒழுங்குபடுத்தும் அரசாங்க அமைப்புகளை எலோன் மஸ்க் தமது ஆதாயத்திற்காக பயன்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக மார்கோ ரூபியோ பொறுப்புக்கு வரலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க விரோதி
தன் பாலின திருமணத்திற்கு எதிரானவர் மட்டுமின்றி, கடும் புடின் விமர்சகரான இவர், ரஷ்ய ஜனாதிபதியை கேங்க்க்ஸ்டர் என்றே அடையாளப்படுத்துபவர். மார்கோ ரூபியோ மட்டுமின்றி வடக்கு டகோட்டாவின் ஆளுநரான டக் பர்கம் என்பவரும் வெளிவிவகார அமைச்சர் பொறுப்புக்கு வரக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தொடர்பில் ஜோ பைடன் அளிக்கும் நிதியுதவி குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் இவர், ஜெலென்ஸ்கி வெல்ல வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் தமக்கிருப்பதாக கூறியுள்ளார்.
உளவுத்துறை தலைவராக ட்ரம்பின் கோல்ஃப் விளையாட்டு நண்பர் John Ratcliffe வரலாம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமைச்சரவையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக Elbridge Colby என்பவர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு நிதி வழங்குவதில் கடும் எதிர்ப்பாளரான இவர், சீனாவை அமெரிக்க விரோதியாக பார்ப்பவர். வேளாண் அமைச்சராக Sid Miller என்பவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்பது வெறும் கட்டுக்கதை என கூறி வருபவர் இந்த Sid Miller.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |