பிரதமர் மோடி மீது மரியாதை உள்ளது.,ஆனால் வாக்குசதவீதத்தை உயர்த்த 21 மில்லியன் தர வேண்டுமா? டொனால்ட் ட்ரம்ப்
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக நிதி தர வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
21 மில்லியன் டொலர்கள்
அரசின் தேவையற்ற செலவுகளை நிறுத்த, DOGE துறையின் மூலம் பல நாடுகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்தார்.
குறிப்பாக, இந்தியாவுக்கு 21 மில்லியன் டொலர்கள் நிதியை நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 16ஆம் திகதி DOGE குறைக்கப்பட்டுள்ள வரி செலுத்துவோர் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலை வெளியிடப்பட்டது.

உக்ரைனுக்கு பிரித்தானியா ராணுவத்தை அனுப்பும் விவகாரம்: மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என ட்ரம்ப் எச்சரிக்கை
உலகின் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடு
இந்நிலையில் புளோரிடாவில் பேசிய ட்ரம்ப், "நாங்கள் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டொலர்களைக் கொடுக்கிறோம்? அவர்கள் அதிக பணத்தை பெற்றிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை உலகின் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
அவர்களின் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு பொருட்களை கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது.
இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக 21 மில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |