ட்ரம்பால் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு... யார் யாருக்கு அதிக வரி?
அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் வகையில் புதிய வரிகளை அமெரிக்கா அமுலுக்கு கொண்டுவருகிறது.
மோசமாகப் பாதிக்கப்படும்
புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த வரிகள், ஒவ்வொரு நாடும் அமெரிக்கவிற்கு விதித்துள்ள வரிகளை ஒப்பிட்டு, பதிலுக்கு வரி விதிக்கப்படும் என்றே ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பல அமெரிக்க வர்த்தக பங்காளிகள் அமெரிக்க பொருட்களின் மீதான அதிக வரிகளைப் பராமரித்து வருவதுடன், குறைந்த அமெரிக்க வரி விகிதங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
இதனால், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளில் அடங்கும் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதும், உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்துவதும் ட்ரம்பின் தற்போதைய இலக்காக கூறுகின்றனர். இருப்பினும், வரி விதிப்பானது வர்த்தகப் போர்களைத் தூண்டி நுகர்வோர் விலைகளை உயர்த்தும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை அமெரிக்கா கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அமெரிக்கா அந்த ஆண்டில் ஏற்றுமதி செய்ததை விட 1.1 டிரில்லியன் டொலர் அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.
92 நாடுகளுடன்
2019 முதல் அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023 தரவுகளின்படி, இரண்டாவது பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடு பிரித்தானியா (271 பில்லியன் டொலர்), அதைத் தொடர்ந்து இந்தியா( $241 பில்லியன்), பிரான்ஸ் ($137 பில்லியன்) மற்றும் துருக்கி ($106 பில்லியன்).
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா 92 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையையும் 111 நாடுகளுடன் வர்த்தக உபரியையும் கொண்டிருந்தது. அமெரிக்காவின் பெரிய வர்த்தக பற்றாக்குறை மூன்று முக்கிய பொருளாதார பங்காளிகளான சீனா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் மிக அதிகமாக உள்ளது.
WTO விதிகளின் கீழ் அமெரிக்கா 160க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தகம் செய்கிறது. மட்டுமின்றி 20 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |