கனடாவுடன் இறுக்கும் மோதல்... ஒன்ராறியோ ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்

Donald Trump Ontario
By Arbin Aug 28, 2026 04:05 AM GMT
Report

Trump rename Lake Ontario as Lake America: ஒன்ராறியோ ஏரியை அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

ஒன்ராறியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றக் கோரும் நிர்வாக உத்தரவு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அச்சுறுத்தல்

கடந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததையடுத்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா அடுத்த மாதம் சமமான அளவிலான பதிலடி வரி விதிப்புகளை அமுல்படுத்தும் எனவும் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான அந்த ஏரிக்கு மறுபெயரிடுவது குறித்து, வர்த்தகப் பிரச்சினைக்கு மத்தியில் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.

கனடாவுடன் இறுக்கும் மோதல்... ஒன்ராறியோ ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப் | Trump Rename Lake Ontario

இந்த நிலையில், தாம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உத்தியோகப்பூர்வமானது என்றும், உடனடியாக அமுலுக்கு வருகிறது என்றும், இந்த மாற்றத்தைச் செய்வதற்கான அனைத்துத் தேவையான ஆவணங்களையும் தனது நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது என்றும் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் புவியியல் பெயர்களுக்கான உத்தியோகப்பூர்வத் தரவுத்தளமாகத் திகழும் 'புவியியல் பெயர்கள் தகவல் சேவை'யில் (Geographic Names Information Service) பெயர் மாற்றத்தைப் புதுப்பிப்பதற்கு, அமெரிக்க உள்விவகார அமைச்சகத்திற்கு 30 நாட்கள் அவகாசம் அளிப்பதாக அந்த நிர்வாக உத்தரவு குறிப்பிடுகிறது.

இதனிடையே, லேக் ஒன்ராறியோ (Lake Ontario) என்ற பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று குறிப்பிட்ட கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, கனேடியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் ஆகியவை உருவாவதற்கு முன்பே இப்பெயர் புழக்கத்தில் இருந்ததாகவும் வியாழக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

உக்ரைன் மீது புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என அச்சம்

உக்ரைன் மீது புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என அச்சம்

மேலும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா மாறிக்கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்; அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கை, தேசிய நினைவுச் சின்னங்கள், நீர்நிலைகளின் பெயர்கள் ஆகியவை மாறி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, எதையும் அதன் பெயரைக் கொண்டே அழைக்க வேண்டும் என்பது கனேடிய மக்களுக்கு தெரியும்; அந்த வகையில், இந்த ஏரி 'லேக் ஒன்ராறியோ' என்றே அழைக்கப்படும், அது இன்றும் என்றும் மாறாது என்றார்.

2025-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்புக்கு வந்தபோது, ​​மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்று மாற்றும் அதே போன்றதொரு உத்தரவில் கையெழுத்திட்டார்.

கனடாவுடன் இறுக்கும் மோதல்... ஒன்ராறியோ ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப் | Trump Rename Lake Ontario

உடனடியாக எதிர்வினையாற்றிய மெக்சிகோ நிர்வாகம், பகிரப்பட்ட ஒரு சர்வதேச நீர்ப்பரப்பிற்கு ஒரு நாடு மட்டும் பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று வாதிட்டதுடன், அந்தப் பெயர் மாற்றத்தையும் மெக்சிகோ நிராகரித்தது.

மட்டுமின்றி, மெக்ஸிகோவிற்கும், தனது வரைபடச் செயலியில் அந்த வளைகுடாவின் பெயரை மாற்றிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கும் இடையே ஒரு சட்டரீதியான மோதலுக்கும் அது வழிவகுத்தது.

சர்வதேச நீர்நிலைகளுக்குப் பெயரிடுவதற்கென உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு எதுவும் இல்லை. புவியியல் அடையாளங்களை அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக எவ்வாறு அங்கீகரிக்கிறது என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதிக்குப் பரந்த அளவிலான அதிகார வரம்பு இருந்தாலும், மற்ற நாடுகள் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

பிற நாடுகள் செய்யும் பெயர் மாற்றங்களை கனடா அங்கீகரிக்க வேண்டிய கட்டாயமில்லை, மேலும் அங்குள்ள அதிகாரிகள் ட்ரம்பின் இந்த நகர்வை நிராகரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US