அமெரிக்காவின் எதிரிகளை வீழ்த்தும்... ட்ரம்ப் வெளிப்படுத்திய இரகசிய ஆயுதம்
வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவை சிறைப்படுத்த அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய Discombobulator ஆயுதம் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
எதிரிகளுக்கு எதிராக
உலகின் எந்த நாட்டிடமும் இல்லாத இந்த ஆயுதம் குறித்து முதல் முறையாக New York Post பத்திரிகை நேர்காணலில் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி மதுரோவைக் கைது செய்வதில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட பிறகு, அந்தச் செயலிழக்கச் செய்யும் ஆயுதத்தை அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த ஆயுதம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட தமக்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஆனால் மொத்தமும் வெளியிட தமக்கு ஆர்வமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆயுதம் எதிரிகளின் கருவிகளை செயலிழக்கச் செய்யும் என்றார், அது ரஷ்யா அல்லது சீன தயாரிப்பாக இருந்தாலும், ஈடாகாது என்றார்.
மதுரோவிற்கு எதிரான நடவடிக்கையின் போது, 47 ராணுவ வீரர்கள் உட்பட 83-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர் தாக்குதலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் காயமடைந்தார், ஆனால் அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவத்தின் வலிமை தொடர்பில் பெருமையுடன் பேசிய ட்ரம்ப், அமெரிக்க இராணுவத்திடம் மட்டுமே அந்த வகையான ஆயுதம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
தீவிரமான ஒலி அலை
மேலும், அந்த ரகசிய ஆயுதத்தைப் பற்றி அமெரிக்கர்கள் பயப்பட வேண்டுமா என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டபோது, அவர் ஆமாம் என்று பதிலளித்தார்.
இப்படியான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருப்பது உலக நாடுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். ஆனால், ஜனவரி 10 ஆம் திகதி வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவலில்,

மதூரோ கைது செய்யப்பட்ட இரவில், ஒரு மிகத் தீவிரமான ஒலி அலை வெனிசுலாப் படைகளையும் கியூபப் பாதுகாவலர்களையும் செயலிழக்கச் செய்தது என குறிப்பிட்டிருந்தார்.
மூக்கில் இரத்தம் வழிய, சிலர் ரத்த வாந்தியுடனும் சுருண்டு விழுந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த ஆயுதத்திற்கு Discombobulator என ட்ரம்ப் பெயரிட்டு பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |