Board of Peace-ல் சேர கனடாவிற்கு விடுத்த அழைப்பை திரும்பப்பெற்ற ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவை Board of Peace அமைப்பில் சேர விடுக்கப்பட்டிருந்த அழைப்பை திடீரென ரத்து செய்துள்ளார்.
இந்த முடிவு, உலகளவில் பெரும் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் கனடா பிரதமர் மார்க் கார்னி, டாவோஸ் மாநாட்டில் சக்திவாய்ந்த நாடுகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகப் பயன்படுத்துவதை கடுமையாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப், “கனடா அமெரிக்காவால் தான் வாழ்கிறது” எனக் கூறி, கார்னி அதற்கு நன்றியுணர்வு காட்ட வேண்டும் என கூறினார் .

ட்ரம்ப் தனது Truth Social தலத்தில் இட்ட பதிவில், “இது வரலாற்றில் மிகப் பெரும் தலைவர்களின் வாரியமாக இருக்கும். ஆனால் கனடாவுக்கு அழைப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
கார்னியின் உரைக்கு டாவோஸில் அரிதான standing ovation கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கனடா சமீபத்தில் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து, நடுத்தர சக்தி கொண்ட நாடுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு (hegemony) எதிராக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Board of Peace திட்டம் முதலில் காசாவில் போர்நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது. உறுப்பினர் நாடுகள் ஒவ்வொன்றும் 1 பில்லியன் டொலர் நிதி வழங்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தற்போது அர்ஜென்டினா, பஹ்ரைன், மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் இணைந்துள்ளன. ஆனால் பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் இன்னும் சேரவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Donald Trump Canada news, Trump Board of Peace decision, Canada US relations 2026, Mark Carney Davos speech, Trump revokes Canada invitation, Board of Peace members list, US foreign policy latest, Canada trade with China, Trump Truth Social statement, Global peace initiative news