ட்ரம்ப் கொலை முயற்சி... மௌனம் கலைத்த மெலானியா ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உருவாகியுள்ள நிலையில், அந்த விடயம் தங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக ட்ரம்பின் மனைவி மெலானியா தெரிவித்துள்ளார்.

மௌனம் கலைத்த மெலானியா ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் பல்வேறு வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்த நிலையில், வெகுநாட்களாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்துவந்தார் அவரது மனைவியான மெலானியா ட்ரம்ப்.
ஆனால், அவரது கணவரான ட்ரம்பைக் கொலை செய்ய முயற்சி நடந்ததால் மெலானியாவும், ட்ரம்பின் பிள்ளைகளும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அது குறித்து மெலானியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், என் கணவரை அந்த பயங்கர குண்டு தாக்கியதைக் கண்டபோது, என் வாழ்வும், என் மகன் வாழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருப்பதாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். அதாவது, தங்கள் வாழ்வே மாறும் ஒரு நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், என் கணவரை பாதுகாப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தைரியமாக செயல்பட்ட ரகசிய பாதுகாப்பு சேவை ஏஜண்டுகளுக்கும் சட்டத்துறை அதிகாரிகளுக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றும் மெலானியா ட்ரம்ப் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |