2026யில் ஏழு புதிய நாடுகளுக்கு ட்ரம்பின் தடை அமுல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏழு புதிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது 2026ஆம் ஆண்டில் அமுலுக்கு வருகிறது.
40 நாடுகளுக்கு தடை
அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நோக்கம் கொண்ட வெளிநாட்டினரை தடை செய்வதாக, கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெள்ளை மாளிகை கூறியது.

இந்த நடவடிக்கையின் மூலம், தங்கள் குடியுரிமையின் காரணமாக மட்டுமே அமெரிக்காவிற்கு வருவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஏழு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான பயணத்தடை, 2026ஆம் ஆண்டு தொடங்கும்போது நடைமுறைக்கு வருகிறது.
இதன்மூலம் புர்கினா பாசோ, லாவோஸ், மாலி, நைஜர், சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் மற்றும் குடியேறாதவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |