மீண்டும் சர்ச்சையில் வெள்ளை மாளிகை ஊடகச் செயலர்...
Trump’s new press secretary, faces scrutiny after reportedly failing US bar exam: வெள்ளை மாளிகையின் புதிய ஊடகச் செயலர், வழக்கறிஞர்களுக்கான தகுதித்தேர்வில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேற்றி ஸக்கரியா என்னும் பெண், ட்ரம்பை தவறுதலாக தன் கணவர் என உளறிக் கொட்டிய விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அவரது கல்வித்தகுதி குறித்து ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
மீண்டும் சர்ச்சையில் ஊடகச் செயலர்...
ட்ரம்ப் தனது ஊடகச் செயலராக தேர்ந்தெடுத்துள்ள கேற்றி ஸக்கரியாவை அறிமுகம் செய்யும்போது, அவர் ஒரு சட்டத்தரணி என்று கூறியுள்ளார்.

கேற்றியும் தன்னை ஒரு சட்டத்தரணி என்றே கூறிக்கொள்கிறார். ஆனால், அவர் வழக்கறிஞருக்கான தேர்வில் தோல்வியடைந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, கேற்றி Pepperdine பல்கலையில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆனால், ஒருவர் அமெரிக்காவில் சட்டத்தரணியாக பணியாற்ற அதற்கான தகுதித்தேர்விலும் வெற்றிபெறவேண்டும்.
இந்நிலையில், கேற்றியிடம் நீங்கள் எங்கு தேர்வெழுதி வெற்றி பெற்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் ஊடகவியலாளர்கள்.
ஆனால், அதற்கான நேரடியான பதிலை கேற்றி கூறவேயில்லை. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலும், நான் சர்வதேச சட்டத்தைக் கையாள்கிறேன், முறைப்படி தகுதி பெற்றுள்ளேன் என்றே கூறியுள்ளார்.
இதற்கிடையில், கேற்றி வெள்ளை மாளிகை ஊடகச் செயலராக பொறுப்பேற்றதும், சமூக ஊடகங்களில் நீச்சல் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவசர அவசரமாக நீக்கி விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.