ட்ரம்பின் மகன் ஆட்சிக்கு வருவார்... 131 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் கூறும் தகவல்
131 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு புத்தகம், ட்ரம்பின் இளைய மகன் ஆட்சிக்கு வருவார் என கணித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவிவருகின்றன.
ட்ரம்பின் மகன் ஆட்சிக்கு வருவார்...
ட்ரம்புக்கும் மெலானியா ட்ரம்புக்கும் பிறந்த மகனான பேரோன் ட்ரம்ப் (Baron Trump) ஆட்சிக்கு வருவார் என131 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு புத்தகம் கணித்துள்ளதாக கூறுகிறார்கள் இணையவாசிகள்.
ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், அந்த புத்தகத்தின் தலைப்பு 'Baron Trump’s Marvellous Underground Adventure' என்பதாகும்.
அந்த கதையின் கதாநாயகனான ‘Little Baron Trump' ஒரு பணக்காரரின் இளைய மகன். அவர் ட்ரம்ப் மாளிகை என்னும் மாளிகையில் வாழ்கிறார் என்கிறது அந்த புத்தகம்.
இன்னொரு ஆச்சரியமளிக்கவைக்கும் விடயம், அந்த கதையில் வரும் ஜனாதிபதி, தனது ஆலோசகராக ஒருவரை நியமிக்கிறார். அவரது பெயர் பென்ஸ்.
உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவரின் பெயர் மைக் பென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இன்று நடக்கும் பல உண்மைகளை கணித்துள்ள அந்த புத்தகத்தின் அடிப்படையில், ஒரு நாள் ட்ரம்பின் மகனான பேரோன் ட்ரம்ப் ஆட்சிக்கு வருவாரோ என வியப்படைந்துள்ளனர் ஒரு கூட்டம் இணையவாசிகள்.
அத்துடன், அந்த புத்தகத்தை எழுதியவர் ஏதோ அபூர்வ சக்தி படைத்தவராகவோ அல்லது டைம் ட்ராவலர் ஆகவோ இருக்கக்கூடும் என அவர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |