நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை அந்நாட்டை சீனா ஆக்கிரமிக்காது: ஜின்பிங் கூறியதாக தெரிவித்த ட்ரம்ப்
தைவானை தனது ஆட்சி காலத்தில் சீனா ஆக்கிரமிக்காது என ஜி ஜின்பிங் கூறியதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனத் தூதரகம்
சீனா தீவு தேசமான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், அமெரிக்காவுடனான சீனாவின் உறவுகளில் தைவானை மிக முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த பிரச்சனை என்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது.
இதுதொடர்பில் சீனாவின் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங் யு கூறும்போது, தைவான் தொடர்பான பிரச்சனைகளை அமெரிக்கா விவேகத்துடன் கையாள வேண்டும் என்றும், சீனா-அமெரிக்க உறவுகள் மற்றும் தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பு
இதனைத் தொடர்ந்து, டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தைவான் குறித்து சீனாவின் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும்வரை நான் ஒருபோதும் தைவானை ஆக்கிரமிப்பு செய்ய மாட்டேன்" என ஜி ஜின்பிங் (Xi Jinping) என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.
தைவானின் முன்னணி ஆயுத விநியோகஸ்தர் மற்றும் சர்வதேச அரங்கில் முக்கிய ஆதரவாளராகவும் அமெரிக்கா உள்ளது.
எனினும், பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்ப தைவானுடன் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகளை அமெரிக்கா பராமரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |