வர்த்தகப் போர் அபாய சூழலில் இந்தியாவை எச்சரிக்கும் வகையில் பேசிய ட்ரம்ப்
அதிக வரி வசூலிப்பதை இந்தியா குறைத்துக் கொள்ளும் என்று நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள்
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவின் செலவினங்களை குறைக்க பல நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்தினார். குறிப்பாக, அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன் எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாகவும், அதில் இந்தியாவும் ஒன்று என்றும் ட்ரம்ப் கூறினார்.
உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு
அவரது இந்த நடவடிக்கைகளால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறுகையில், "இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.
அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன். ஏப்ரல் 2ஆம் திகதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |