ரஷ்யாவில் இருந்து கட்டுப்படுத்த முடியாது: அமெரிக்க தடைகள் குறித்து தெரிவித்த ஜேர்மனி
அமெரிக்கத் தடைகளால் ரோஸ் நேப்டின் துணை நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
தடைகள்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை என்று கூறிய டொனால்ட் ட்ரம்ப், Rosneft மற்றும் மற்றொரு ரஷ்ய எண்ணெய் நிறுவனமான Lukoil மீதான தடைகளை அறிவித்தார். 
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த தடைகள், Rosneft துணை நிறுவனங்களை பாதிக்காது என்று ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "Rosneft ஜேர்மன் துணை நிறுவனங்களை குறிவைக்கும் நோக்கில் தடைகள் இல்லை என்று, தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதங்களைப் பொருளாதார அமைச்சகம் பெற்றுள்ளது.
எனவே, துணை நிறுவனங்களுடனான வணிக பரிவர்த்தனைகளை தொடரலாம். அமெரிக்க நிர்வாகம் உத்தரவாதங்களை வழங்கும் ஆவணத்தை வழங்கியுள்ளது. மேலும் பெர்லின் விரைவில் சட்ட உறுதிப்பாட்டை வழங்கும் கூடுதல் விளக்கங்களை பெறும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "Rosneftயின் ஜேர்மன் செயல்பாடுகள், அவற்றின் ரஷ்ய தாய் நிறுவனத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களின் வணிக நடவடிக்கைகளை ரஷ்யாவில் இருந்து கட்டுப்படுத்த முடியாது. மேலும் ரஷ்ய தாய் நிறுவனம் அல்லது ரஷ்ய அரசுக்கு வருமானத்தை ஈட்ட முடியாது" என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |