இடைக்காலத் தேர்தலில் தோற்றது ஏன்? 3 காரணங்களை சொன்ன ட்ரம்ப்
trump says 3 reasons for midterms loss: இடைக்காலத் தேர்தலில் குடியரசு கட்சி தோற்றதற்கு இஸ்ரேல் மீது நிலவும் ஒரு வெறுப்பும் காரணம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தேர்தலில் குடியரசு கட்சி தோல்வி
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி பாரிய வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள ட்ரம்ப்பின் ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தியே இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
CBS ஊடகத்திற்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் குறித்த தனது மதிப்பீட்டை தெரிவித்துள்ளார்.
தோல்விக்கான காரணங்கள் இதில் பேசிய அவர், "முடிவுகள் எப்படி இருந்தாலும் தனது செல்வாக்கு வலுவாகவே உள்ளது, குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தனது ஆதரவை வாக்குகளாக மாற்றத் தவறி விட்டனர்.

சிலருக்காக நான் கடுமையாகப் பிரச்சாரம் செய்தேன். ஒருவேளை நான் வாக்குச்சீட்டில் இடம்பெற்றிருந்தால், நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
அவர்களுக்குப் போர் பிடிக்கவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்ததும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மேலும், நம்பமுடியாத வகையில், இஸ்ரேல் மீது ஒரு பெரும் வெறுப்பு நிலவுகிறது. அதுவும் ஒரு காரணம். இவைதான் முதன்மைக் காரணங்கள் என்று நினைக்கிறேன்.
நான் எப்போதும் போர்களில் இருந்து விலகியே இருக்க விரும்புகிறேன். நானே பல சர்வதேச போரை நிறுத்தியுள்ளேன். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.