கனடாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம்: டிரம்ப் நம்பிக்கை
Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தடைப்பட்ட பேச்சுவார்த்தை
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அமெரிக்கா முன்வைத்த புதிய கோரிக்கைகளை அடுத்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
இதனால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது.
கனடாவின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கனத்த வரிகளை விதித்தது.

கனடாவும் இதற்கு ஈடு கொடுக்கும் விதமாக உடனடி பதில் நடவடிக்கையை அறிவித்தது.
பின்னர் இதன் தொடர்ச்சியாக மதுபானங்கள் மற்றும் மால்ட் பானங்களை இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த தீவிரமான மோதல்களுக்கு பிறகும், அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 11ம் திகதி கல்கரியில் செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி, இரு தரப்பிற்கு பலனை தரக்கூடிய பேச்சுவார்த்தைக்கு கனடா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் கெடுபிடிகளுக்கு பயந்து இந்த பேச்சு வார்த்தையானது நடைபெறாது என்று கார்னி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் டப்ளினில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை கனடா அரசு நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கனடாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |