இளவரசர் ஹரியை நாடுகடத்துவதாக கூறியுள்ள ட்ரம்ப்: எதிர்க்கத் தயாராகும் தம்பதியர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியானால் இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம் என மறைமுகமாக கூறியுள்ளார்.
ஆனால், ட்ரம்பை எதிர்க்க ஹரி மேகன் தம்பதியர் தயாராக உள்ளதாக தம்பதியருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம்
ஹரியும் அவரது மனைவி மேகனும், அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்திருப்பதால், அவர் அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.
ஹரி விசா தொடர்பான ஆவணங்களில் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்தது.
ஆனால், ஹரியின் விசா தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படாது என Carl Nichols என்னும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். என்றாலும், ட்ரம்ப் ஜனாதிபதியானதும் பிரச்சினை ஏற்படுத்தலாம் என்னும் ஒரு கருத்து உருவாகியுள்ளது.
ட்ரம்பை எதிர்க்கத் தயாராகும் இளவரசர் ஹரி மேகன் தம்பதியர்
மேகன் ஒரு அமெரிக்கக் குடிமகள், தம்பதியரின் மகனான ஆர்ச்சி இப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.
ஆக, தங்கள் வீடாக கருதும் கலிபோர்னியாவை விட்டு ஹரி மேகன் தம்பதியர் வெளியேற வாய்ப்பில்லை என்கிறார்கள் தம்பதியருக்கு நெருக்கமானவர்கள்.
எனவே, ட்ரம்பை எதிர்க்க இளவரசர் ஹரி மேகன் தம்பதியர் தயாராவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ட்ரம்ப் தங்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்ற முயற்சி செய்வாரானால், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள சட்டத்தரணிகள் குழு தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு பெருமளவில் ஆதரவும் இருப்பதாகவும், அவர்கள் ஹரி மேகன் அமெரிக்காவிலேயே வாழ்வதை உறுதி செய்ய ஆவன செய்வார்கள் என்றும் தம்பதியருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |