எவ்வளவு காலம் உயிரோடு இருப்பேனோ தெரியாது... ட்ரம்ப் சோகம்
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பேனோ தெரியாது என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
ஃப்ளோரிடாவிலுள்ள ட்ரம்பின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் நுழைய முயன்றபோது, பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, ஃப்ளோரிடாவிலுள்ள Mar-a-Lago என்னுமிடத்தில் அமைந்துள்ள ட்ரம்புக்கு சொந்தமான வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார் ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் (21) என்னும் இளைஞர்.
Trump: "I don't know how long I'll be around. I've got a lot of people gunning for me, don't I?" pic.twitter.com/Boq5pxHxav
— Aaron Rupar (@atrupar) February 23, 2026
ட்ரம்ப் வீட்டில் வேலை செய்பவர்கள் வெளியேறுவதற்காக கதவு திறக்கப்பட்டபோது உள்ளே நுழைந்த மார்ட்டின், பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியபோது அவர்கள் அவரை சுட்டுக் கொன்றார்கள்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு பெனிசில்வேனியாவில் நிகழ்ந்த பிரச்சாரக்கூட்டத்தில் ஒருவர் ட்ரம்பை சுட, மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
அதேபோல, ஃப்ளோரிடாவில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றபோது, ட்ரம்பைக் கொல்வதற்காக அங்கு துப்பாக்கியுடன் மறைந்திருந்த ஒருவர் சிக்கினார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒருவர் துப்பாக்கியுடன் தனது வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்ததாலேயே, என்னை சுட்டுக் கொல்ல நிறையபேர் காத்திருக்கிறார்கள் அல்லவா என கேட்ட ட்ரம்ப், நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பேனோ தெரியவில்லை என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |