கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மீது அதிக வரி விதிப்பேன் - ட்ரம்ப் எச்சரிக்கை
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பொருளாதார சேதம் விளைவிக்க கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இணைந்து செயல்பட்டால், அவர்களுக்கு மிகப்பெரிய இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
"அமெரிக்காவுக்கு பொருளாதார சேதம் செய்ய கனடா, EU இணைந்தால், தற்போது திட்டமிடப்பட்டதை விட பல மடங்கு அதிகமான வரிகள் விதிக்கப்படும்" என்று Truth Social தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
25 சதவீதம் வரி - புதிய வர்த்தக போர்
25 சதவீத இறக்குமதி வரி விதிப்பதையும், அமெரிக்க வர்த்தகக் குறைபாட்டுக்கு காரணமான நாடுகளுக்கான பதில் வரிகள் (reciprocal tariffs) ஏப்ரல் 2 அன்று அறிவிப்பதையும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி இதை கனடா மீதான நேரடி தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் & அமெரிக்கா பதிலடி நடவடிக்கைகள்
ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்க Bourbon விஸ்கி மீது 50 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா 200% வரி விதிக்க தயாராக இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த புதிய வரிகள், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் வர்த்தக மோதலை தீவிரமாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |