நான் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் - ட்ரம்ப் பேச்சு
நான் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பர் என டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த ஆண்டு மே 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை, இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையியே 4 நாட்கள் நடைபெற்ற மோதல், மே 10 ஆம் திகதி இருநாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது.

தன்னுடைய மத்தியஸ்தம் காரணமாகவே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார்
யூனியன் மாநில உரையில் பேசிய டிரம்ப், "என்னுடைய முதல் 10 மாத ஆட்சி காலத்தில் 8 போர்களை நிறுத்தினேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்திருக்கும்.
#WATCH | Addressing the 2026 State of the Union, United States President Donald Trump says, "... In my first 10 months, I ended eight wars... Pakistan and India would have had a nuclear war. 35 million people said the Prime Minister of Pakistan would have died if it were not for… pic.twitter.com/GnrgJKtjID
— ANI (@ANI) February 25, 2026
எனது தலையீடு மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் கூறினார்" என பேசியுள்ளார்.
எனது தலையீடு இல்லையென்றால் 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் கூறினார் என சொல்லவந்ததை, அவர் தவறுதலாக பேசியதாக பலரும் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம், இதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லை என டிரம்பின் கூற்றை இந்தியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |