ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப்
ஈரானில் இருந்து இரண்டாவது விமானி மீட்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
F-15E ரக விமானம்
வெள்ளிக்கிழமையன்று நடந்த குழப்பமான சண்டையின்போது, ஈரானியப் படைகளால் அமெரிக்க A-10 வார்ஹாக் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே F-15E ரக விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. மோதல் தொடங்கியதில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் அமெரிக்க விமானம் இதுவாகும்.
F-15E ரக விமானத்தில் இருந்து அதன் விமான வெளியேறினார். ஆனால், இரண்டு நாட்கள் நீடித்த தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகே அவர் மீட்கப்பட்டார். அப்போது கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தெரிய வந்துள்ளது.
இரகசியமாக மீட்பு
சில மணி நேரங்களுக்கு பிறகு, விமானி இரகசியமாக மீட்டப்பட்டதாகவும், தங்களின் இரண்டாவது மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த நடவடிக்கை இரகசியமாக வைக்கப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.

மேலும், IRGC படைகளுடனான கடுமையான துப்பாக்கிச் சண்டையில் அவர் காயமடைந்தார்; ஆனால் வீரமிக்க அந்த போர் வீரர் ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பகுதிக்குள் இருந்தார்.
ஒவ்வொரு மணி நேரமும் நெருங்கி வந்துகொண்டிருந்த நமது எதிரிகளால் அவர் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தார். தற்போது அவர் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |