ட்ரம்பின் இரண்டாவது முறை... 80,000 டொலர் கடந்த பிட்காயின் விலை
பிட்காயின் விலை ஞாயிறன்று சாதனை உச்சத்தை தொட்ட நிலையில், ட்ரம்பின் இரண்டாவது வருகை கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு சிறப்பானதாக அமையும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் வெற்றி முகம்
பிட்காயின் விலை வரலாற்றில் முதல் முறையாக 80,000 டொலர் கடந்துள்ளது. தற்போது ஒரு பிட்காயின் விலையானது 80,368 டொலர் என வர்த்தகம் செய்யப்படுகிறது.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி முகம் என தகவல் வெளியான நொடி முதல் பிட்காயின் விலை அதிகரித்தே வந்துள்ளது. மட்டுமின்றி, டிஜிட்டல் கரன்சி மீதான கட்டுப்பாடுகளை ட்ரம்ப் எளிதாக்குவார் என்றே கூறப்படுகிறது.
புதன்கிழமை ஒரு பிட்காயின் விலை 75,000 டொலர் என இருந்தது. மார்ச் மாதம் ஒருமுறை 73,797 டொலர் என பதிவானதே அதன் உச்சமாக கருதப்பட்டது. தற்போது வரலாற்றில் முதல் முறையாக 80,000 டொலர் கடந்துள்ளது.
டொனால்டு ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்பது ஒரு பித்தலாட்டம், வழிப்பறி போன்றது என கூறி வந்த அவர், தற்போது கிரிப்டோகரன்சி மீது முதலீடும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிரிப்டோகரன்சி தலைநகராக
மட்டுமின்றி, அமெரிக்காவை உலகின் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி தலைநகராக மாற்ற உறுதியளித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் கிரிப்டோகரன்சி ஆதரவாளரான எலோன் மஸ்க் இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
டிரம்ப் தனது மகன்கள் மற்றும் தொழில்முனைவோருடன் சேர்ந்து, வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் என்ற டிஜிட்டல் நாணய தளத்தை தொடங்கப்போவதாக செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
ஆனால் இந்த மாத தொடக்கத்தில் அவரது தளம் ஒரு தடுமாற்றத்துடன் விற்பனையை ஆரம்பித்தது. அதன் டோக்கன்களில் ஒரு பகுதி மட்டுமே வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |