ட்ரம்ப் தாக்குதல்தாரியின் உடல் மாயம்: வெளிச்சத்துக்கு வரும் கவலையளிக்கும் உண்மைகள்
அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரித்துவரும் டொனால்டு ட்ரம்ப் மீதான கொலை முயற்சி வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக தாக்குதல்தாரியின் உடல் மாயமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிச்சடங்குகளுக்காக
இது விசாரணையின் உண்மையான போக்கை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும் குற்றச்சாட்டப் படுகிறது. Clay Higgins என்பவரே இருதரப்பினர் சார்பில் கொலை முயற்சியை மறுஆய்வு செய்யும் பொருட்டு நாடாளுமன்றம் சார்பில் நியமிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் ஆகஸ்டு 5ம் திகதி தனிப்பட்ட விசாரணைக்காக தாக்குதல்தாரியின் உடலைக் காண வேண்டும் என FBI அதிகாரிகளிடம் கோரியுள்ளார். முன்னாள் பொலிஸ் அதிகாரியான Clay Higgins இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், தமக்கு கிடைத்த பதில் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 13ம் திகதி பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, 10 நாட்களில் தாக்குதல்தாரியின் சடலத்தை இறுதிச்சடங்குகளுக்காக விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக Clay Higgins அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் மிக ரகசியமாக நடந்துள்ளது என்றும், குடும்பத்தினருக்கு உடலை விட்டுக்கொடுத்தது வேறு எவருக்கும் தெரியப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கே தெரியப்படுத்தவில்லை என்பது விசித்திரமாக உள்ளது என்றார்.
உண்மையை மூடிமறைக்க
உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், இந்த வழக்கு தொடர்பில் பல்வேறு கேள்விகள் தற்போதும் பதிலளிக்கப்படாமல் உள்ளது என்றார். ஆகஸ்டு 4 முதல் 6ம் திகதி வரையில் பட்லர் பகுதியில் விசாரணை முன்னெடுத்ததாகவும், ஆகஸ்டு 12ம் திகதி உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக முக்கியமான வழக்கில் விசாரணை முடியும் முன்னர் தாக்குதல்தாரியின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்தும் அதில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் FBI அதிகாரிகள் உண்மையை மூடிமறைக்க முயல்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாகவும் Clay Higgins குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் முழு விசாரணையை தமது குழுவினருடன் முடிக்க முடிவு செய்துள்ளதகாவும், எந்த இடையூறுக்கும் தாம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |